ஆபீஸ்
இன்றைய நிலையில் ஆபீஸ் அல்லது ஐ டி ஆபீஸ் என்றால் அதன் அலுவலகம் எவ்வாறு இர்ருக்கும் என்று படித்த எல்லாருக்குமே தெரியும். அதிலும் ஐ டி ஆபீஸ் அமைப்பு அதன் முறை இவைஎல்லாம் எப்படி இருக்குமென்று நன்றாகவே தெரியும். நான் ஐ டி யில் வேலை பார்க்கும் பொது அது பிடிக்காமல் விலகி வேறு துறையை தேர்ந்தெடுத்தேன்.
·
அதற்கு காரணம் 8 மணி நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்க்க வேண்டும்.
·
மேலாளர் எப்பொழுதும் கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டிருப்பார். ( பொதுவாக சிறு டீம் ஆக இருந்தால் )
·
ப்ரீயாக ஒருவருடுன் ஒருவர் மிகவும் கவனமுடன் பேச வேண்டும்
·
நம்முடைய statusஐ மைண்டைன் பண்ண நிறைய செலவு பண்ண வேண்டும்
·
நமக்கென்று தனித்துவம் என்பது பெரும்பாலும் கேள்விக்குறியே?
·
மிக நீண்ட நேரம் ஆபீசில் இருக்க வேண்டும்
·
அதுவும் ப்ராஜெக்ட் முடிவில் நாள் கணக்கில் ஏன் மத கணக்கில் கூட விடாமல் வேலை செய்ய வேண்டும்
மேலே சொன்னவை நான் அறிந்த சில காரணங்கள். இவை என்னுடைய ஆரம்ப நாட்களில் நடந்தவை. அதன் பிறகு I T அல்லாத பல கம்பெனிகள் மாறி வந்து விட்டேன்.
இப்பொழுது IT துறை பற்றி என்னுள் எழும் சில கேள்விகள். இதற்கு பல பேரிடம் பதில்கள் இருக்கும். இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே!
இவை ஆனதும் அனைவருக்குமே பொருந்தும் என்று அவசியமில்லை.
·
தேவையில்லாத கோபம் - கம்ப்யூட்டர் துறையில் சேர்ந்த பிறகு அவர்களுடைய குணத்தில் மாற்றான். மிக முக்கியமாக தேவியில்லாம் கோபப்படுவது, பெரும்பாலும் வீட்டில்.
·
வரவு - செலவு : வருமானத்திற்கும் செலவிற்கும் சமமானம் உள்ளதா? இது இப்பொழுது அனைவரிடமும் உள்ளதென்றாலும் முக்கியமாக இத்துறையில். எனக்கு தெரிந்த என்னுடைய நண்பர் மற்றும் அவர் மனைவி இருவரும் ஐ டி வேலைக்கும் செல்பர்கள், மாதம் ரூ.60,000 க்கு மேல் சம்பாதிப்பவர்கள். அனால் மாதக் கடைசியில் அவருகளுடைய சேமிப்பு வெறும் ரூ.5,000. வேறு எந்த EMI அல்லது கடன் இல்லை. இவர்களுடைய செலவு மட்டுமே.
·
பெற்றோர் - பெரும்பாலான பெற்றோர் விவசாயமோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செயதவர்களகதான் இருப்பர். ஆகவே எப்படி இவர்களால் இப்படி வரவுக்கு மீறி செலவு செய்ய முடிகிறது.(நம்முடைய நாடு தனிநபர் சேமிப்பு மிகுந்த நாடு, ஏன் மேற்கத்திய நாடுகளில் தனி நபர் வீழ்கிறார் என்றால் அதற்கு காரணம் வரவை விட செலவு மிக அதிகம் இருப்பதால். நமது படித்த இளைஞர்கள் இது தெரிந்தும் இதை தொடர்கிறார்கள்.
பெற்றோர்களுடைய எண்ணம் இந்த விஷயத்தில் எவ்வாறு இருக்கிறது.
·
பேரம் : இவர்களிடம் பெரும்பாலும் பேரம் பேசும் தன்மை மிக குறைவாகவே இருக்கிறது .
·
பொறுமை & நேரமின்மை: எதையும் மிக வேகமாக செய்ய வேண்டும். அதவும் விடுமுறை நாட்களில் கூட இது தொடர்கிறது.
·
வெளி உலகம் : ஒருவேளை கம்பனியிலிருந்து தூக்கப்பட்டால் அவர்களுடைய நிலை? 5 அல்லது 10 வருட அனுபவக்காரர்கள் என்ன செய்வார்கள்?

.jpg)