Monday, January 27, 2014

சிறந்த தமிழ் நாவல்கள் இரா.முருகன்

இந்த பதிவு அப்படியே இரா.முருகன் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வலைபதிவில் இருந்தால் அவ்வபோது என்னாலும் இதை உபயோகபடுதிகொள்ள முடியும் என்பதால்.

நன்றி :  லிங்க்: http://www.eramurukan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

சிறந்த தமிழ் நாவல்கள் – என் பட்டியல்
———————————————–
தேர்வுக்கான தகுதி : கதையமைப்பு, சொன்ன விதம், வசவச என்று இல்லாமல் படிக்க சுவாரசியமான நடை.

1) கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர்
2) தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி
3) சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை (முற்றுப் பெறாவிட்டாலும்) – பாரதியார்
4) பொய்த் தேவு – க.நா.சு
5) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
6) அலை ஓசை – கல்கி
7) மோகமுள், அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
8) ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப் போ – ஜெயகாந்தன்
9) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
10) பள்ளிகொண்ட புரம் – நீல பத்மநாபன்
11) வண்ணக் கனவுகள் – விட்டல்ராவ்
12) புலிநகக் கொன்றை, கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்
13) கருக்கு – பாமா
14) எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா
15) சாயத்திரை – சுப்ரபாரதி மணியன்
16) பாய்மரக் கப்பல் – பாவண்ணன்
17) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்
18) ரத்தம் ஒரே நிறம், கரையெல்லாம் செண்பகப்பூ, மீண்டும் ஜீனோ – சுஜாதா
19) அடிமையின் காதல் – ரா.கி.ரங்கராஜன்
20) 6174 – சுதாகர்
21) புயலில் ஓர் தோணி – ப.சிங்காரம்
22) தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
23) பாலங்கள் – சிவசங்கரி
24) வாசவேச்வரம் – கிருத்திகா
25) நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
26) வேர்ப்பற்று, தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி
27) காகித மலர்கள் – ஆதவன்
28) பதினெட்டாவது அட்சக் கோடு,மானசரோவர் – அசோகமித்திரன்
29) ஒரு புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
30) நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
31) திருவரங்கன் உலா – ஸ்ரீவேணுகோபாலன்
32) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
33) வாடாமல்லி – சு.சமுத்திரம்
34) அசடு – காஸ்யபன்
35) மெல்லக் கனவாய் பழங்கதையாய் – ப.விசாலம்
26) சாய்வு நாற்காலி – தோப்பில் முகம்மது மீரான்
27) கடல்புரத்தில் – வண்ணநிலவன்
28) புத்தன்வீடு – ஹெப்சிபா தாசன்
29) இரும்பு குதிரைகள் – பாலகுமாரன்
30) இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா

(பட்டியல் தொடர வாய்ப்பு உண்டு; வரிசை மனதுக்கு வந்தபடிக்கு மட்டும். சில நாவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்)

என் நாவல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

Sunday, January 26, 2014

6174

-    தமிழ் நாவல். திரு. க. சுதாகர் எழுதியது.

இணையத்தில் மேய்ந்த போது கிடைத்த ஒரு லிங்கில் மிக சிலாகித்து தமிழில் எழுதிய சிறந்த அறிவியல் புனை நாவல் எனப்பட்டது. சரி அதனுடைய முன்னுரையையும் எழுத்தாளரின் பூலோகத்தையும் ஆராய்ந்து விட்டு சரி படிக்கலாம் என்று நினைத்து மறந்து விட்டேன். நம்மிடம் சரி என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், ஆங்கில நாவல் என்றால் அது மண்டைக்குள்ளேயே ஓடி எப்படியாவது அந்த புக்கை வாங்கிவிட்டுத்தான் மறுவேலை ஆனால் தமிழ் என்றபோது அதுவும் புது ஆசிரியர் என்றபோது அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. இது நடந்தது நான்கு மாதங்களுக்கு முன்னால். இந்த புத்தக கண்காட்சிக்கு சென்ற போது discovery book palaceல் எதேட்சையாக கண்ணில் பட்டது உடனடியாக வாங்கி விட்டேன். நேற்று காலை புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன், என் நான்கு மணி நேரம் என்ன ஆனது என்றே தெரியவில்லை மதிய சாப்பாடை உண்ட பிறகு புக்கை முடித்து விட்டுதான் மறு வேலை பார்த்தேன்.
                              கன்னியாகுமரியில் ஆரம்பித்து தாய்லாந்துக்கு சென்று அப்படியே அமெரிக்கா சென்று அங்கே ஒரு யு டர்ன் அடித்து சென்னை போய் திருவந்தபுரம் போய் அப்புறம் லூனார் சென்று அங்கே இருந்து ஒரு சாப்பர் எடுத்து பூரி சென்று இறுதியாக பர்மாவில் முடித்து மறுபடியும் மெக்ஸிகோவில் ஆரமிபிகிரார்கள் அடுத்த பாகத்திற்காக.
6174 -  இந்த என்னை இவர் வைத்து விளையாடும்  விளையாட்டு உண்மையிலேயே மிக அருமை. இந்த மொத புத்தகத்திற்கும் அடிப்படை
தலைவால் நேராகித்
தன்வாலே தலையாகித்
தன்னிலே தான்கழியத்
தானேயாய் நின்றிடுமே”
இதில் ஆச்சர்யம் நம்பரை வைத்து கொண்டு இவர் எழுதியிருக்கிற பழங்கால செய்யுள்கள், நான் கூட முதலில் இது எல்லாம் உண்மையிலே இருந்தது என்று நினைத்தேன். லெமூரியன் சீட் கிறிஸ்டல், பிரமிட், ஹர்ஷத் நம்பர்ஸ், தமிழ் பண்பாடு, கடலியல், ரா என்று விரிந்து கொண்டே செல்கிறது.
நிச்சயமாக தமிழில் படிக்க வேண்டிய ஒரு நல்ல அறிவியல் புனை நாவல்.


நூல்கள் நூறு - எழுத்தாளர் பாராவின் பட்டியல்

இந்த பதிவு அப்படியே அதிஷா பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வலைபதிவில் இருந்தால் அவ்வபோது என்னாலும் இதை உபயோகபடுதிகொள்ள முடியும் என்பதால்.

நன்றி: அதிஷா
லிங்க்: http://www.athishaonline.com/2013/12/blog-post_5.html

இனி தொடர்க:





இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது 7ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பா.ராகவன் தொகுத்த இந்த சிறிய பட்டியலை யாரோ முன்னாள் வலைப்பதிவர் ஒருவர் தன் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொருவரும் இப்புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும் என்கிற ஒரு குட்டி அறிமுகத்தோடு இப்பட்டியலை மிக மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார் பாரா. இது டாப்டென் பட்டியலாக இல்லாமல் முன்னும்பின்னுமாக தொகுக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சி சமயத்தில் பலருக்கும் பயன்படும்.

(அடுத்த ஆண்டு முழுக்க வேறெதையும் படிக்காமல் இந்த பட்டியலில் இருக்கிற புத்தகங்களில் பாதியை மட்டுமாவது முழுமையாக படித்துவிட நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.)

வாசிப்பதை சுவாசமாக கொண்ட எழுத்தாளர் பாரா 2006க்கு பிறகு வாசித்த நூல்களில் டாப் 100ஐயும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் இல்லையா? இந்த எளிய வாசகனின் கோரிக்கையை ஏற்று.. மனதுவைக்கவேண்டுகிறோம்.


***

1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.

Friday, January 10, 2014

ஆகாய விமானம்:


சிறு வயதில் ஊரில் விளையாடி கொண்டிருக்கும் போது வானத்தில் மிக தூரத்தில் ராக்கெட் விட்டு சென்ற புகையை அண்ணாந்து பார்த்து நமக்கு தெரிய வில்லை என்றாலும் தெரிந்த மாதிரி நண்பர்களிடம் எதையாவது சொல்லி கொண்டிருப்போம். கொஞ்சம் அல்ல நிறைய வயது ஏறிய பிறகுதான் விமானம் ஹெலிகாப்ட்டர் எல்லாம் பார்க்க ஆரம்பித்தோம். அதுவும் மதுரை ஏர்போர்ட் பின்புறம் உள்ள ரிங் ரோட்டில் நின்று பார்ப்பது என்பது லட்ச ரூபாய் நமக்கு கிழே இருந்து கிடைத்த மாதிரி. இது நடந்து ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால், ஆனால் இப்பொழுதும் இதே காட்சி அங்கு நடைபெறுவது நம்மள மாதிரித்தான் எல்லாரும் என்று நினைக்க தோன்றும். எல்லாருக்கும் இருக்கும் ஆசை போல எப்பொழுது நமது முதல் விமான பயணம் அமையும் என்று ஏங்க வைத்த நாட்கள் மிக அதிகம். அப்போடியொரு நாள் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு நடந்தது. எனக்கு மிகவும் சந்தோசம் அதுவும் முதல் முறை ஏறபோகிறோம் என்று. எல்லாம் மிகவும் நன்றாகவே நடந்தது விமானத்துக்குள் கால் வைக்கும் வரை.
வைத்த பிறகு பெரிய சுவாரஸ்யமே இல்லை, ஏனென்றால் சீட் இடைவெளி மிக குறைவு, ஏதோ ஓசியில் பொங்கல் வாங்க அடித்து கொள்வதுபோல் இரண்டு சீட்டுக்கு இடையில் நெருக்கம் மிக அதிகம். அதை விட முக்கியம் நீங்கள் பயணம் செய்யும் அந்த ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ எப்படா போகும் என்றாகிவிடும். அதுவும் பக்கத்தில் இருப்பவன் 300 ரூபாய்க்கு ஒரு இட்லி ஒரு வடை, ஒரு தயிர் கப் அப்புறம் ஒரு ஜூஸ். நமக்கும் வேறு பொழுது போக வழி இல்லை என்பதால் அவனை வேடிக்கை பார்க்கும் பொழுது அவனுடைய எப்படியிருக்கும் என்பது நான் சில தடவை சாப்பிடும்போது அனுபவித்திருக்கிறேன். “பேரு பெத்த பேரு பருக நீலு ரேது”  என்பது போல் இருக்கும் இந்த ஏர் ஹோஸ்டஸ் ஐ பார்க்கும் போது. பார்பதற்கு மிக மிக அழகாக இருக்கும் அந்த பெண்கள் தண்ணியோ சாப்பாடோ கொடுக்கும் போது நம்மூரில் ஹோட்டலில் வேலை செய்யும் வட இந்திய பையன்களின் முகம் வந்து தொலைக்கிறது, மனம் ஐயோ பாவம் என்றாகி விடுகிறது. எவனோ ஒருவன் ஏர் ஹோஸ்டஸ்க்கும் பைலட்டுக்கும் நல்ல லிங்க் இருக்கும் என்று சொன்னது அப்பப்போ மூளையில் எட்டி பார்ப்பதை தடுக்க முடிவதில்லை. சரி இதையெல்லாம் தாங்கி கொள்ளலாம் என்றால் ஒரு மணி நேர பயணத்திற்கு இரண்டு மணி நேரம் வெயிட் பண்ண வேண்டும். அதை விட முக்கியம் விமானத்தில் பயணம் என்று முடிவான பிறகு பஸ் அது ஏன் இந்த ஆட்டோ கூட எடுக்க தோன்ற மாட்டேன்கிறது. ஒன்லி கால் டாக்ஸி வரும் போதும் போகும் போதும். ஆனால் மற்ற நாட்களில் ஒன்லி பஸ் நோ ஆட்டோ அதுவும் ஒயிட் போர்டு பஸ் ஏனென்றால் அதில்தான் பச்சை போர்டு பஸ்ஸை விட மூன்று ரூபாய் கம்மியாக இருக்கும்.




ஆனால் இதை எல்லாம் தாண்டி விமான பயணத்தை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் – பயண நேரம் மிக மிக குறைவு, காலையில் சென்று மாலையில் திரும்பி விடலாம், வேறு உடை எடுத்து போக தேவை இல்லை ஆபீஸ் பயணமாக சென்றால். இவை  எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணம் வெளியில் பீற்றிக்கொள்ளலாம்.

Wednesday, December 18, 2013

ஜிகர்தண்டா – 3

கூட்டணி:



2014 லோக் சபாவுக்கான கருணாநிதி தேர்தல் நெருங்கும் வேலையில் தமிழ் நாட்டில் அணைத்து கட்சிகளும் விவாதிக்கும் விஷயம் கூட்டணி. இதில் முதல் ஆளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார், அதிலும் காங்கிரசஸ ஒரு படி மேலே போய் நம்ம்பிக்கை துரோகி என்று சொல்லிவிட்டார். என்னக்கேன்னோவோ கடைசியில் நம் ராமதாஸ் மாதிரி அது போன மாசம் என்று சொல்லிவிடுவாரோ என்று. பாஜகவும் காங்கிரஸ்ம் தமிழ் நாட்டில் மிகவும் எதிர் பார்க்கும் கூட்டணி, தேமுதிக. ஆனால் கேப்டனோ தன்னுடைய வாரிசை சினிமாவுக்கு தாரை வார்க்க ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக நான்கு மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கேப்டன்  காங்கிரஸ் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார். சரி பாஜக என்று போனால் ஜெவும் மோடியும் நண்பர்கள் என்பதால் எந்த நேரத்தில் வேணுமானாலும் கூட்டணி அமையலாம். பார்ப்போம் இன்னும் நான்கு மாதத்தில் என்னென்ன காமெடி நடக்கிறதென்று!

மூடர் கூடம்:




மூன்று மாதர்த்திற்கு முன்பு ரிலிசான படம், அப்போது பார்க்க முயன்று நண்பர்கள் கம்பனி இல்லாததால் பார்க்க முடியாமல் போயிற்று. (பொதுவாக தனியாக தியட்டரில் படம்  பார்க்கும் பழக்கம் இல்லை). நேற்று தான் பார்க்க முடிந்தது. வாவ் ! சான்சே இல்லாத ரகம். நவீன் – தன்னுடைய தயாரிப்பு மற்றும் இயக்கம் என்றாலும் மற்றவர்களை தான் நிறைய முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். Black Humour என்று சொல்லபடுகிற காமெடி.. நிறைய இடத்தில வாய் விட்டு சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.. நவீனின் பின்புலமும் மிக சாதாரண ஒரு கதை. இந்த மாதிரி ஆட்கள் வெற்றி பெறுவதுதான் ஒரு தனி மனிதனின் உண்மையான வெற்றி. தூக்கி விட ஆள் இருந்தும் சறுக்கி சறுக்கி எழுபவர்கள் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை. 

Wednesday, December 11, 2013

உணவகம் - ஜூனியர் குப்பண்ணா ஹோட்டல் – வேளச்சேரி

வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே பாலத்திற்கு இந்த பக்கம் மஹிந்திரா கார் ஷோ ரூம் ஒட்டியுள்ளது. இன்னமும் ஈசியாக பழைய திண்டுக்கல் வேலு பிரியாணி இருந்த இடத்தில இருக்கிறது.

ஈரோடு பக்கம் மிகவும் பேமஸ் ஆன ஒன்று. கரூர் மற்றும் கோயம்புத்தூரில் ஏற்கனவே சாப்பிட்ட அனுபவம் உள்ளதால் இந்த கடை வந்தவுடன் இங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்துகொண்டேன். கடை திறந்து சில நாட்கள் தான் ஆகிறது. எனக்கு நேற்று இரவு தான் அங்கு சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த கடையில் மட்டன் சிறப்பு என்பதால் அதையே நான் விரும்பி சாப்பிட்டேன். உடன் வந்தவர்கள் ஏனோ சிக்கனோடு மல்லு கட்டவே விரும்பினார்கள். மட்டன் பிரியாணியின் சிறப்பே மற்ற கடைகள் போல் அல்லாமல் இங்கு மட்டனை சுக்கா போல் செய்து பரிமாறுகிறார்கள். மட்டன் பள்ளிபாளையம் சொல்ல தேவையில்லை, மிக அருமை. சிக்கனில் சிக்கன் அண்டா பிரை மிக வித்தியாசமாக இருந்தது, சிறு சிறு சிக்கன் பீசை முட்டையோடு பிரை செய்து கொடுக்கிறார்கள். ஸ்டார்ட்டர்ஸ் எனப்படிகிற ட்ரை அயிட்டம்ஸ் அளவில் கொஞ்சம் தான் இருக்கிறது. மற்ற படி விலை சிறிது அதிகம் என்றாலும் சுவைக்காக கொடுக்கலாம். ஐந்து பேர் சாபிட்டால் அதிக பட்சம் Rs.1400 ல் இருந்து Rs.1500 க்குள் வரும்.
                             மெனு கார்டு 
இதன் கிளைகள் சென்னையில் வேளச்சேரி தவிர்த்து தி.நகர், அண்ணாநகர் மற்றும் குரோம்பேட்டையிலும் உள்ளது. 
என்ன இன்னும் வேளச்சேரியில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தேய்த்தால் வேலு பிரியாணி என்றே வருகிறது.

ரேட்டிங்: பத்துக்கு எட்டு

Tuesday, December 3, 2013

சாந்தாராம் (SHANTHARAM) by Gregory David Robert


நாவல் – ஒருவரது வாசிப்பு ஆர்வத்துக்கு நாவல் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் அதனுடைய எழுத்து நடையை பொறுத்து நாம் மிக இயல்பாக கடந்து விடுவோம். என்னை பொருத்தவரை கதையின் போக்கில் நுழைந்தவுடன் என்ன வேலை இருந்தாலும் சதா அதே நினைப்பாகவே இருக்கும். அப்படி என்னை வாசிக்க வாய்த்த புத்தகங்கள் மிக அதிகம். இதெல்லாம் நான் இப்போது சொல்வதற்கு காரணம் ஒரு நாவல் “சாந்தாராம்” என்கிற ஆங்கில நாவல். 2008 லியே ஒரு நண்பனால் அறிமுக படுத்தப்பட்ட புத்தகம். அதனுடைய ௯௨௮ பக்கங்களை நினைத்து மலைத்து வைத்து விடுவேன். பிறகு 2012 ல் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன். படிப்பதற்கு இப்பொழுதான் நேரம் கிடைத்தது. முக்கால்வாசி முடித்து விட்டேன். இன்னொருநாள் இதை பற்றிய விமர்சனத்தை பார்ப்போம். இப்பொழுது நான் இங்கு பகிர இருப்பது இதை வாசிக்க தூண்டிய புத்தகத்தின் பின்புலங்கள்.
இது ஒரு சுய சரிதை புத்தகம். சுய சரிதை என்றால் உடனே காந்தியின் நினைவு வருவது தவிர்க்க முடியாது ஆனால் இது adventure ரகம். கிரகோரி டேவிட் ராபர்ட் (Author: Gregory David Robert) என்பவரால் எழுதப்பட்டது. சாந்தாராம் எப்படிப்பட்ட புத்தகம் என்றால் ஹென்றி ஷாரியரின் சுய சரிதை புத்தகமான “Papillon”, கல்கியின் “பொன்னியின் செல்வன்”  போன்றது. இரண்டும் வேறுபட்ட தளம் என்றாலும் இதுவரை எவ்ளவோ புத்தகம் படித்திருந்தாலும் இதை என் நினைவில் இருந்து அகற்ற முடியாது. Papillon புத்தகத்தை தமிழில் கி.ரங்கராஜன் “பட்டாம்பூச்சி” என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்த்திருக்கிறார் என்று எளிதில் கடந்து விட முடியாது, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் நடந்த கதை தளத்தை நேரில் நின்று பார்க்கும் உணர்வை தரவல்லது. பொன்னியின் செல்வன் நான் சொல்லவே தேவை இல்லை. ஒவ்வொரு புத்தக திருவிலாவிலும்  மிக அதிக விற்பனை ஆகும் புத்தகம். இங்கு நான் கூறியிருக்கிற மூன்று புத்தகங்களுமே 1000 பக்கங்களை கொண்டது.

புத்தகத்தின் சாராம்சம் இதுதான், 1980 ல் ஆஸ்திரேலியா சிறையில் கொள்ளை வழக்குகளில் சிறை வைக்கப்பட்டு அங்கிருந்து தப்பி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியா சிறை துறையினரால் மிக தேடப்படும் லிஸ்டில் இருந்தார். தப்பிய அவர் பல இடங்களில் சிதறி போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவின் மும்பைக்கு வந்த்ரங்கினார். மும்பையில் இவருடைய நிழல் உலகம், காதல், நட்பு ஆகியவை ஓர் திரில்லர் சினிமாவுக்குரிய அனைத்துமே இருக்கும். அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை திரை வடிவமக்குவதற்கு ஹாலிவுட்டில் மிக பெரிய போட்டியே நடக்கிறது. இதில் நடிபத்ர்க்கு முதலில் ரசல் க்ரோவ் ஆர்வமாயிருந்தார் ஆனால் அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜானி டெப் தேர்வானார். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இதன் காப்புரிமையை வாங்கி வைத்துள்ளது. இயக்குனருக்கு யார் யாரோ வந்து கடைசியில் நம் மீரா நாயர் தேர்வானார். கூடவே ஜானி டெப் உடன் நமது அமிதாப் பச்சனும் இணைந்தார். இதோ அதோ என்று இழுத்துக்கொண்டே போய் இன்னும் திரை வடிவமாகாமல் இருக்கிறது.  வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இதன் உரிமையை 2015 வரை நீடித்துள்ளது. ஜானி டெப் ம் அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகி ஐவரும் இந்த படத்தின் ஒரு தயாரிப்பாளராக மாறி விட்டார். இவ்வளவு ஜாம்பவான்கள் இதில் ஆர்வமா இருக்கும் போதே உங்களக்கு தெரிந்திருக்கும் இந்த புத்தகத்தின் உலகளாவிய தாக்கத்தை. எல்லா சர்வதேச எழுத்தாளர்களின் புத்தகங்களிலும் தவறாமல் இடம் பெரும் வாக்கியம் World’s Best Seller. ஆனால் இது உண்மையிலேயே World’s Best Seller.