Saturday, October 9, 2010

பதிவில் பிரபலமாவது எப்படி?

நம்ம மக்கள் எப்பவுமே சினிமா, அரசியல், விளையாட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் மத்த விசயத்துக்கு கொடுக்கிறது கிடையாது. என்னோட ஸ்கூல் படிக்கிற வயசில அது ஏன் இப்ப கூட தினத்தந்தி பேப்பரை படிக்கிறது காட்டிலும் அதுல வர வெள்ளி மலரைதான் நாம விரும்பி படிப்போம். சரி இப்பதான் எல்லாம் வேலைக்கு போய்கிட்டு இருக்கோம் அதுக்கு ஆங்கில அறிவு ரொம்ப தேவைபடுதுன்னு இங்கிலீஷ் பேப்பர்ரான தி ஹிந்து, டைம்ஸ் of இந்தியா பேப்பரை படிச்சாலும் அதுலயும் சினிமா நியூஸ்தான் முதல்ல படிக்கிறோம். இத நான் ஏன் சொல்றேனா பதிவில பிரபலமா இருக்கிற எல்லாருமே ஏதோ ஒரு வகையில சினிமாவை வைத்துதான் பிரபலமா ஆயிருப்பாங்க. அதா தவிர்த்து பிரபலமா ஆயிருப்பவங்க கொஞ்ச பேருதான். இல்லேன்னா அடுத்தவங்கள திட்டி திட்டியே பிரபலமா ஆயிருப்பாங்க.


சரி விஷயத்துக்கு வரேன் . இப்படி போட்டாதான் நம்மளையும் கண்டுகுவாங்க.

Love Letter Q/A Format

A teenage college guy sent a love letter (in Q/A format) to his classmate.



My Dearest Reshma ,





Please answer the following questionnaire. For Options



(A) 10 marks,

(b) 5marks and

(c) 3 marks.





**********





1) Whenever you enter the class room, your sight always falls on me because:



(a) of love

(b) you couldn't control seeing me

(c) really ... Am I doing it?





**********



2) Whenever professor cracks joke, you laugh and turn and look at me because:



(a) you always like to see me smiling

(b) you are testing whether I like jokes

(c) you are attracted by my smile





**********



3) When you were singing in the class, I entered and immediately you stopped singing because:



(a) you are so coy to sing before me

(b) my presence influenced you

(c) you feared that whether I'll like your song





**********



4) When you were showing your childhood photo, when I asked for it, you hide it because:



(a) you felt ashamed

(b) you felt uneasy

(c) you don't know





**********



5) During trekking, myself and my friend gave you hand for lifting you and you took only my friend's because:



(a) you enjoyed my disappointment

(b) you won't feel leaving my hand after grabbing

(c) you don't know





**********



6) You were waiting yesterday for bus and didn't get into your bus...



(a) you were waiting for me

(b) you were dreaming about me and didn't notice the bus

(c) that bus was crowded





**********



7) You introduced me to your parents when they came to college because:



(a) I am going to be your groom

(b) you just want to know what your parents think about me

(c) just you felt like introducing me to them





**********



8) I told that I like girls wearing roses. Next day, you came with a rose on your head because:



(a) to fulfill my wish

(b) you like roses

(c) by chance you got a rose





**********



9) On that day, it was my birthday. You too came to temple early at 6:00 A.M because:



(a) you want to pray along with me

(b) you want to meet me before any one could meet on my birthday

(c) you want to wish me at temple because you are spiritual.





**********



If you have scored more than 40, then you are loving me. Don't delay in expressing it.





If you have scored between 30 and 40, love is budding in your heart and it's getting ready to bloom. If you have scored less than 30, you are in confusion whether to love me or not.





Eagerly awaiting your reply..





Love , Aakash





**********************







Reshma's reply letter was also in Q/A format ........





Aakash ,



Please answer the following Yes/No questionnaire.





**********



1) If somebody sits in the first row, normally people entering the class, sees them.



(a) Yes (b) No





**********



2) If a girl laughs and looks anyone, is it love?



(a) Yes (b) No





**********



3) While singing, if somebody forgets lines of the songs, will he/she stop singing or not?



(a) Yes (b) No





**********



4) I was showing to my friends (who are all girls) my childhood photo.



You poked your nose inside..... Right ?





(a) Yes (b) No





**********



5) I avoided to hold your hand during trekking. Couldn't you understand yet?



(a) Yes (b) No





**********



6) Should I not wait for my best friend ( Anjali ) at the bus stand?



(a)Yes (b) No





**********



7) Shouldn't I introduce you to my parents as a friend?



(a) Yes (b) No





**********



8) You have said you also like Lotus, cauliflower, banana's flower. Is it true ?



(a) Yes (b) No





**********



9) Oh was that your birthday. That's why I could see you in temple.. I come daily to Temple . Do you know ?



(a) Yes (b) No





If you have answered "Yes" to any of the question, then I am not loving you. If you have answered "No", then you don't know the meaning of Love.





Hope everything is clear to you ..

Friday, October 8, 2010

ப்ராஜெக்ட்னா என்னா?

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"




நியாயமான ஒரு கேள்வி



"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்

வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –



நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.



நானும் விவரிக்க ஆரம்பிதேன்.



"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.

அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல

இருந்தே செய்யணும்.

இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய

தயாரா இருக்கான்."



"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".



"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,

இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.

எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.

இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.



"சரி"



இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க

பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".



இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.



காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?



ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?



அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.



"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?



"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."



"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு

எதுக்கு MBA படிக்கணும்?" –



அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.



"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
 
"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்


இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா

E - Mail Forward

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ய உங்க அலுவலதுக்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யாரு வேளையில் இருந்து விடுபட போகிறார்கள் என்பதை கண்டறியுங்கள்..




2. உங்க பாசுக்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்கள்..



3. உங்க யாஹு id ல இருந்து ஜிமெயில் க்கு ஒரு மெயில் அனுப்புங்க. உடனே gmaila திறந்து பாருங்க.. மெயில் வர எவ்ளோ நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.. இந்த முறைய அப்படியே திருப்பி (reverse la) செய்யுங்க..



4. உங்க கை விரல்களை எண்ணுங்க.. இன்னும் போர் அடிக்குதா, கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்க.. இன்னுமா. சரி அப்படினா பக்கத்துல உள்ளவரையும் விடாதீங்க..



5. அடுத்தவங்க வேல பாக்கும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்.. கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்.. அவ்வப்போது உங்களோட முகபாவனைகளையும் மாற்றுங்கள்.. அப்போது தான் நீங்க வேலை செய்வது போல தோன்றும்..



6. போன வாரம், அல்லது போன மாதம் வெளியான பத்திரிக்கைகள், புத்தகங்களை படியுங்கள்..



7. தேநீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட முயற்சி செய்து பாருங்கள்.



8. அலைபேசி அல்லது தொலைபேசியை எடுத்து உபயோகத்தில் இல்லாத எண்களுக்கு போன் பண்ணுங்கள்..



9. உங்கள் கணினியில் ஒரே நேரத்தில் எத்தனை applications a ஓபன் பண்ண முடியும் என்பதை சோதித்து பாருங்கள்.. முடிந்தால் உங்களது டெஸ்க்டாப் ல எவ்ளோ icon-s a போட முடியும்னு சோதியுங்கள் (full-a போட்டு பொறவு ஒன்னொன்னா delete பண்ணுங்க..



10. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள் (shift delete போட்டுராதீங்கோ ). அதை Recycle bin ல இருந்து restore செய்து விளையாடுங்கள் .. திரும்ப திரும்ப செய்து பார்க்கலாம் .



11. முக்கியமா internet இருந்தா orkut ல போய் உங்களோட friends (or friend a illathavanga read rights கொடுத்தா .) oda scrapbook ல ஏதாவது எழுதுங்க. அப்புறம் அந்த scrapbook fulla ஓபன் பண்ணி படியுங்க.. நல்லா time பாஸ் ஆகும் ..



12. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சாய்ந்து பாருங்க .. (அப்படியே தூங்கிராதீங்க).. seat la hight a கூட்டி குறைச்சி விளையாடலாம்..

மனைவி அகராதி - (ரசித்து சிரித்தது)

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்




மனைவி : நமக்கு வேணும்

அர்த்தம் : எனக்கு வேணும்



மனைவி ; உங்க முடிவு

அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்



மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..

அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க



மனைவி : தாராளமா.. செய்யுங்க

அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை



மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை

அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்



மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..

அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.



மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு

அர்த்தம் : வேற வீடு பாக்கணும்



மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?

அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்



மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?

அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.



மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?

அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு





மனைவி : சரி

அர்த்தம் : நோ..





மனைவி : நோ

அர்த்தம் : சரி





மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?

அர்த்தம் : பழகிக்கங்க





மனைவி ; ஒண்ணுமில்லை

அர்த்தம : நிறைய இருக்கு



மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை

அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்

தி.மு - தி.பி (ரசித்து சிரித்தது)

(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)






அவன் : ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்





காத்திருந்தேன்





அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?





அவன் : இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை





அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?





அவன் : ஆமாம்,இன்றும்,என்றென்றும்





அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?





அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்





அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?





அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய



சந்தோச தருணம்





அவள் : என்னை திட்டுவாயா ?





அவன் : ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று





நினைத்தாயா ?





அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?













(தி.பி) திருமணத்திற்குப் பின் :





கீழிருந்து மேலே படியுங்கள்

மரங்களை வெட்டுங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.






மண்ணின் வில்லன்



அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )



நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'



ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.



இதன் கொடூரமான குணங்கள்



இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!



இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.



தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.



உடம்பு முழுதும் விஷம்



இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!



ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.



காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.



அறியாமை



நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.



கேரளாவின் விழிப்புணர்வு



நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??



ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.



நல்ல மரம் ஆரோக்கியம்



வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .



சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?



இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

SMS மொக்கை

உலகக் காதலின் சின்னமா தாஜ்மகால சொல்றோம். ஆனா உங்களுக்கு சில உண்மைகள் தெரியுமா?




* மும்தாஜ் ஷாஜகானோட நாலாவது பொண்டாட்டி (மொத்த டிக்கட் ஏழு)



* மும்தாஜ கரெக்ட் பண்றதுக்காக அவளோட புருஷனையே ஷாஜுக்குட்டி போட்டுத் தள்ளியிருக்காரு (இது காதலா கள்ளக்காதலா?)



* மும்தாஜ் செத்தது அவளோட பதினாழாவது பிரசவத்துல (அவ்வ்வ்வவ்வ்வ்)



* அவ செத்ததுக்குப் பிறகு மும்தாஜோட தங்கச்சிய வேற சாசு கரெக்ட் பண்ணியிருக்காரு (மச்சக்காரன்யா..)

மொக்கை

இன்சூரன்ஸ்

இனி ஒரு நிதி செய்வோம்’ என்ற நாணய விகடன் பகுதியை படித்தேன். அதில் கூறப்பட்ட வாக்கியமே இது ’இன்சூரன்ஸ் என்பது முதலீட்டுக்கான வழி அல்ல". நாம் நிறைய பேர் தவறாக புரிந்து கொண்ட விசயம் இதுதான்.




இன்சூரன்ஸில் இரு முக்கிய பாலிசிகள் உள்ளது. ஒன்று என்டோவ்மென்ட பாலிஸி மற்றும் டேர்ம் பாலிஸி ஆகும். சரி, அவற்றின் வித்தியாசம் என்ன என்று பார்ப்போம். எண்டோவ்மென்ட் பாலிஸியோ டேர்ம் பாலிஸியோ எதுவாக இருந்தாலும் பாலிஸி காலம் முழுவதும் நாம் பணம் செலுத்துகிறோம். எண்டோவ்மென்ட் பாலிஸியைப் பொறுத்தவரை பாலிசி காலம் முடிந்த பிறகு பாலிசி தொகையும் கொஞசம் போனசும் கிடைக்கும். ஆனால் டேர்ம் பாலிசியில் அசம்பாவிதம் நேராத வதையில் எந்தப் பணமும் கிடைக்காது.



’எந்தப் பணமும் கிடைக்காது’ என்ற ஒரே காரணத்தால்தான் யாரும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க விரும்புவதில்லை. இது முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறை. ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.



30 வயது நபர் 5 லட்சம் ரூபாய்க்கு எண்டோவ்மென்ட பிளான் எடுக்கிறார். இதற்காக வருடத்துக்கு கிட்டதட்ட 21,000 ரூபாய் (25 ஆண்டுகளுக்கு) அவர் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் 30 வயது நபர் 5 லட்சம் டேர்ம் பாலிசி எடுத்தால் வருடத்துக்கு 2000 ரூபாய்க்கு குறைவாகவே (25 ஆண்டுகளுக்கு) செலுத்தினால் போதுமானது. இதன் மூலம வருடா வருடம் மீதமாகும் 19,000 ரூபாயை வேறு முதலீட்களில் போட்டு வருமானம் பார்க்கலாம்.



சுமாராக 8 சதவிகிதம் வருமானம் என்றால் கூட, 25 வருடத்துக்குப் பிறகு 13 லட்ச ரூபாய் கிடைக்கும்! அதுவே 10 சதவிகிதம் வருமானம் என்றால் 18 லட்சம் கிடைக்கும். ஆனால் எண்டோவ்மென்ட் பாலிசி போட்டிருந்தால் முதிர்வுத் தொகையான ஐந்து லட்சம் பளஸ் போனஸாக 5 லட்சம் கிடைக்கும் 10 சதவிகிதம் வருமானம் என்றால் 6 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் 10 சதவிகிதம் கிடைக்குமா என்பது சந்தேகமே !). என கிட்டதட்ட பத்து லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். எனவே நாம் முதலீட்டாக ஒதுக்கும் தொகையை டேர்ம் இன்சூரன்ஸில் கொஞ்சமும் மற்ற முதலீடுகளிலுமாக பிரித்துப் போடும்போது, ரிஸ்க் கவரும் கிடைக்கிறது. நமது முதலீடும் பெருகுகிறது,

வணக்கம் நண்பர்களே

வணக்கம் நண்பர்களே,


ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்க வரேன். இனிமேல் வர பதிவை என்னோட அனுபவங்களையும் நான் கேட்டு ரசிச்ச படிச்ச விசயங்களையும் இங்க பகிர்ந்துகிறேன்.