மின்சாரம்:
அதிமுக ஆட்சிக்கு
வரும்பொழுது 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை இருந்ததாகவும் இப்பொழுது
முழு கொள்ளளவான தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்து விட்டதாக சிறிது
நாட்களுக்கு முன்பாக முதல்வர் அவர்கள் சட்ட சபையில் தெரிவித்து இருந்தார்கள். அவர்கள்
சொன்ன நேரமோ என்னவோ தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிக மின்வெட்டு
ஏற்படுகிறது. தற்பொழுது 2500 மெகாவாட் மின்சாரம் தேவைபடுவதாக பிரதமருக்கு கடிதம் எழுதி
இருக்கிறார். இந்த நேரத்தில் பிரதமர் சோனியாவிடம் கேட்டு அது தமிழகத்துக்குள்
இப்போதைக்கு சுத்தமாக வராது என்று தான் தோன்றுகிறது.

மோடி:
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல டைம் பத்திரிகை நடத்தும்
ஓட்டெடுப்பில் சிறந்த மனிதருக்கான தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு அரசியல்
தலைவராக நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். தற்போது இவருக்கு அதிக ஓட்டு விழுந்து
வருவதாகவும், இவரே சிறந்த
நபராக தேர்வாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் டைம் பத்திரிகை உலக அளவிலான தலைவர்களை வரிசைப்படுத்தி சிறந்த
மனிதர் பட்டத்திற்கு தேர்வு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் நடப்பு 2012 ம்
ஆண்டுக்கான சிறந்த நபர்கள் யார் என 42 பேரை பட்டியலிட்டுள்ளது.
மோடி இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து டைம் பத்திரிகை அளித்துள்ள
விளக்கத்தில், சர்ச்சைக்குரிய
இந்து தேசியவாதி மோடி ஜனநாயகம் போற்றும் இந்தியாவில் காங்கிரஸ் அரசை அகற்ற
இந்தியர்கள் பலரும் விரும்பும் நபராக உள்ளார் என்று கூறியுள்ளது. அதிகம்
செய்திகளில் பாராட்டப்பட்டவராகவும், தூற்றப்பட்டவராகவும் பேசப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
மினிபஸ்:
மினி பஸ்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், சொத்துகளில், அ.தி.மு.க., சின்னமான, "இரட்டை இலை'யை வடிவமைத்துள்ளனர். ஒரு கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்த, பொதுமக்கள் பணத்தை பயன்படுத்தக் கூடாது. எனவே, அரசு நிறுவனங்கள், சொத்துகளில், "இரட்டை இலை'யை பொறிக்க, தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ள
எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பில் பின் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெரிய இலைகளில், தனியாக தண்டு இருக்கும். நான்கு
இலைகளிலும், நரம்புகள் இருக்காது. லேசான மற்றும்
அடர்த்தியான, பச்சை நிறத்தில், நான்கு இலைகள் உள்ளன.எனவே, "இரட்டை இலை' சின்னத்தையும், பஸ்களில் வரையப்பட்டுள்ள, நான்கு இலைகளையும் ஒன்றாக பாவிக்க முடியாது. தமிழகம் முழுவதும், 610 மினி பஸ்களை இயக்க போவதாக, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தற்போதைக்கு, அப்படி எந்த திட்டமும் இல்லை. எந்த
அடிப்படையும் இல்லாமல், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது.
யூகத்தின் அடிப்படையில், கூறப்பட்டுள்ளன. மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இரண்டாம் உலகம்:
இணைய விமர்சனத்தை நோண்டினால் படத்துக்கு
ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள், இரண்டு மாதர்திர்க்கு முன்பு வரை ஒரு படம்
பார்க்க நினைத்தால் உடனடியாக பார்த்து விடுவேன். ஆனால் இப்பொழுதெல்லாம்
தியட்டருக்கு செல்லவே பயமாக இருக்கிறது. அதுவும் அவர்களுடைய பார்கிங் மற்றும்
காண்டீன் விலை டிக்கெட் விலையை விட அதிகமாக இருக்கிறது. இதற்கு மேல் ஆன்லைனில்
புக் செய்தால் ரூ.120 உடன் மேற்கொண்டு ஒரு 50 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வரும்
படங்களும் படு மொக்கையாக இருப்பதால் நமது Rs.200 தப்பித்தது
என்று வேண்டி கொள்வேன். இப்பொழுதெல்லாம் முப்பது படங்களில் ஒரு நல்ல படத்தை
பார்ப்பது என்பது மிக அரிதாகிவிட்டது. மார்க்கெட்டிங் பண்ணினால் எந்த படத்தையும்
ஒட்டி விடலாம் என்ற தவறான எண்ணம் திரைதுரையினரிடம் அதிகமாக உள்ளது என்று
நினைக்கிறேன். ஆனால் நிலைமை ரஜினி படமே (குசேலன்) என்றாலும் நிலைமை இதுதான்.
ஆச்சர்யம்:
விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ
