மழை:
சென்னை அருகே இன்று ஹெலன் புயல் தாக்கும்னு
ரமணன் சொல்லியிருக்காரு பார்ப்போம். ஆனால் பெரும்பான்மையான மழை தென் மாவட்டத்தில்
பெய்யும்னு வேறு சொல்லியிருக்காரு. இந்த வருஷம் மழை பொய்த்தால் அடுத்த வருடம்
அனைவருக்கும் டண்டநக்காதான். ஒரு டவுட்? நல்லவங்க இந்த நாட்டில் இருகிரதால்தான்
மழை பெய்யுதுன்னு சொல்றானே ஒருத்தன் அவன் நல்லவனா? கெட்டவனா? (எங்கோ படித்து)
ATM:
நேற்று பெங்களூரில் நடந்த ATM கொள்ளை அதுவும்
காலையில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஷுட்ட்டர் ஐ மூடி அந்த பெண்மணியை
அரிவாளால் வெட்டி வெறும் பத்து பதினைந்தாயிரம் ரூபைய்க்க்காக, அதுவும் அந்த
பெண்மணியின் குடும்பத்தை நினைக்கும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை. என்ன நம் நாட்டில் கொலை என்பது பேசன் ஆகி
விட்டது. காவல் துறையும் பல முறை சொல்லிவிட்டது கண்டிப்பாக CCTV மற்றும் காவலாளி
இருக்க வேண்டும். காவலாளி என்றல் திடகாத்திரமான ஆள் வயதான ஆள் இல்லை. ஒன்று
இருந்தால் இன்னொன்று இல்லாமல் இருக்கிறது.
விவாதம்:
தினமும் எல்லா செய்தி சேனல்களிலும் தவறாமல் இடம்பெறுவது
விவாத நிகழ்ச்சி. இதனால் மக்களுக்கு எதாவது உதவுகிறதா? இல்லை இதை
சேனல் வேறு வகைகளில் மக்களுக்கு தெரியபடுதுகிறதா? தெரியவில்லை. இல்லை மக்கள்
ரசனைகேற்றவரு தர மாட்டேங்கிறதா?
காமெடி சேனல்:
தமிழ் நாட்டில் பெருமாலான இளவயதினரின் விருப்ப
சேனல் விஜய் டிவி அல்லது காமெடி சானல்களாகிய ஆதித்யா மற்றும் சிரிப்பொலி.
குறிப்பாக ஆதித்யா சேனலின் நிகழ்ச்சிகளாகிய சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் கொஞ்சம்
நடிங்க பாஸ் மிகவும் அருமை. இன்றைய போட்டி உலகில் சான்ஸ் கிடப்பது என்பது குதறி
கொம்பு அதிலும் தனித்துவமான நிகழ்சிகள் தருவது அதை விட கடிது. ஆனாலும் இந்த
நிகழ்ச்சியையும் தாண்டி அடுத்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி வருவது நிச்சயம்.
மருத்துவமனை கொள்ளைகள்:
இதை பற்றி மிக அதிகமானோர் கூறியிருந்தாலும் இந்த
மருத்துவ காப்பிடு கொள்ளை மிகவும் கொடியது, மிகவும் கொடியது. ஐம்பதாயிரம் லிமிட்
என்றால் மிக அழகாக மேட்ச் செய்து இன்சூரன்ஸ் கம்பெனி இடம் இருந்து வாங்கி
விடுகிறார்கள், அதோடு விட்டால் பரவாயில்லை மேற்கொண்டு அதே அளவு தொகையையும்
நம்மிடம் இருந்து புடிங்கி கொள்கிறார்கள். இதுதான் இப்பொழுது மிகவும் லாபகரமான
தொழில். அதனால் தான் பல பேர் தன் மகன்/மகள் மார்க் குறைவாக எடுத்திருந்தாலும்
கோடிகளை கொட்டி மருத்துவ படிப்பில் சேர்க்கிறார்கள்.
No comments:
Post a Comment