வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே பாலத்திற்கு இந்த
பக்கம் மஹிந்திரா கார் ஷோ ரூம் ஒட்டியுள்ளது. இன்னமும் ஈசியாக பழைய திண்டுக்கல்
வேலு பிரியாணி இருந்த இடத்தில இருக்கிறது.
ஈரோடு பக்கம் மிகவும் பேமஸ் ஆன ஒன்று. கரூர்
மற்றும் கோயம்புத்தூரில் ஏற்கனவே சாப்பிட்ட அனுபவம் உள்ளதால் இந்த கடை வந்தவுடன்
இங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்துகொண்டேன். கடை திறந்து சில நாட்கள்
தான் ஆகிறது. எனக்கு நேற்று இரவு தான் அங்கு சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த கடையில் மட்டன் சிறப்பு என்பதால் அதையே
நான் விரும்பி சாப்பிட்டேன். உடன் வந்தவர்கள் ஏனோ சிக்கனோடு மல்லு கட்டவே
விரும்பினார்கள். மட்டன் பிரியாணியின் சிறப்பே மற்ற கடைகள் போல் அல்லாமல் இங்கு
மட்டனை சுக்கா போல் செய்து பரிமாறுகிறார்கள். மட்டன் பள்ளிபாளையம் சொல்ல
தேவையில்லை, மிக அருமை. சிக்கனில் சிக்கன் அண்டா பிரை மிக வித்தியாசமாக இருந்தது,
சிறு சிறு சிக்கன் பீசை முட்டையோடு பிரை செய்து கொடுக்கிறார்கள். ஸ்டார்ட்டர்ஸ்
எனப்படிகிற ட்ரை அயிட்டம்ஸ் அளவில் கொஞ்சம் தான் இருக்கிறது. மற்ற படி விலை சிறிது
அதிகம் என்றாலும் சுவைக்காக கொடுக்கலாம். ஐந்து பேர் சாபிட்டால் அதிக பட்சம் Rs.1400 ல் இருந்து Rs.1500 க்குள் வரும்.
மெனு கார்டு
இதன் கிளைகள் சென்னையில் வேளச்சேரி தவிர்த்து
தி.நகர், அண்ணாநகர் மற்றும் குரோம்பேட்டையிலும் உள்ளது.
என்ன இன்னும் வேளச்சேரியில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தேய்த்தால் வேலு பிரியாணி என்றே வருகிறது.
ரேட்டிங்: பத்துக்கு எட்டு


ரசம் இங்கு மிக சூப்பராக இருக்கும்...
ReplyDeleteஉண்மை...இரண்டு நாள் முன்பு கோவையில் உள்ள ராம் நகரில் ரசதிற்க்காகவே இரண்டு முறை வாங்கி சாப்பிட்டேன்.
Delete