Tuesday, December 3, 2013

சாந்தாராம் (SHANTHARAM) by Gregory David Robert


நாவல் – ஒருவரது வாசிப்பு ஆர்வத்துக்கு நாவல் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் அதனுடைய எழுத்து நடையை பொறுத்து நாம் மிக இயல்பாக கடந்து விடுவோம். என்னை பொருத்தவரை கதையின் போக்கில் நுழைந்தவுடன் என்ன வேலை இருந்தாலும் சதா அதே நினைப்பாகவே இருக்கும். அப்படி என்னை வாசிக்க வாய்த்த புத்தகங்கள் மிக அதிகம். இதெல்லாம் நான் இப்போது சொல்வதற்கு காரணம் ஒரு நாவல் “சாந்தாராம்” என்கிற ஆங்கில நாவல். 2008 லியே ஒரு நண்பனால் அறிமுக படுத்தப்பட்ட புத்தகம். அதனுடைய ௯௨௮ பக்கங்களை நினைத்து மலைத்து வைத்து விடுவேன். பிறகு 2012 ல் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன். படிப்பதற்கு இப்பொழுதான் நேரம் கிடைத்தது. முக்கால்வாசி முடித்து விட்டேன். இன்னொருநாள் இதை பற்றிய விமர்சனத்தை பார்ப்போம். இப்பொழுது நான் இங்கு பகிர இருப்பது இதை வாசிக்க தூண்டிய புத்தகத்தின் பின்புலங்கள்.
இது ஒரு சுய சரிதை புத்தகம். சுய சரிதை என்றால் உடனே காந்தியின் நினைவு வருவது தவிர்க்க முடியாது ஆனால் இது adventure ரகம். கிரகோரி டேவிட் ராபர்ட் (Author: Gregory David Robert) என்பவரால் எழுதப்பட்டது. சாந்தாராம் எப்படிப்பட்ட புத்தகம் என்றால் ஹென்றி ஷாரியரின் சுய சரிதை புத்தகமான “Papillon”, கல்கியின் “பொன்னியின் செல்வன்”  போன்றது. இரண்டும் வேறுபட்ட தளம் என்றாலும் இதுவரை எவ்ளவோ புத்தகம் படித்திருந்தாலும் இதை என் நினைவில் இருந்து அகற்ற முடியாது. Papillon புத்தகத்தை தமிழில் கி.ரங்கராஜன் “பட்டாம்பூச்சி” என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்த்திருக்கிறார் என்று எளிதில் கடந்து விட முடியாது, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் நடந்த கதை தளத்தை நேரில் நின்று பார்க்கும் உணர்வை தரவல்லது. பொன்னியின் செல்வன் நான் சொல்லவே தேவை இல்லை. ஒவ்வொரு புத்தக திருவிலாவிலும்  மிக அதிக விற்பனை ஆகும் புத்தகம். இங்கு நான் கூறியிருக்கிற மூன்று புத்தகங்களுமே 1000 பக்கங்களை கொண்டது.

புத்தகத்தின் சாராம்சம் இதுதான், 1980 ல் ஆஸ்திரேலியா சிறையில் கொள்ளை வழக்குகளில் சிறை வைக்கப்பட்டு அங்கிருந்து தப்பி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியா சிறை துறையினரால் மிக தேடப்படும் லிஸ்டில் இருந்தார். தப்பிய அவர் பல இடங்களில் சிதறி போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவின் மும்பைக்கு வந்த்ரங்கினார். மும்பையில் இவருடைய நிழல் உலகம், காதல், நட்பு ஆகியவை ஓர் திரில்லர் சினிமாவுக்குரிய அனைத்துமே இருக்கும். அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை திரை வடிவமக்குவதற்கு ஹாலிவுட்டில் மிக பெரிய போட்டியே நடக்கிறது. இதில் நடிபத்ர்க்கு முதலில் ரசல் க்ரோவ் ஆர்வமாயிருந்தார் ஆனால் அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜானி டெப் தேர்வானார். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இதன் காப்புரிமையை வாங்கி வைத்துள்ளது. இயக்குனருக்கு யார் யாரோ வந்து கடைசியில் நம் மீரா நாயர் தேர்வானார். கூடவே ஜானி டெப் உடன் நமது அமிதாப் பச்சனும் இணைந்தார். இதோ அதோ என்று இழுத்துக்கொண்டே போய் இன்னும் திரை வடிவமாகாமல் இருக்கிறது.  வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இதன் உரிமையை 2015 வரை நீடித்துள்ளது. ஜானி டெப் ம் அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகி ஐவரும் இந்த படத்தின் ஒரு தயாரிப்பாளராக மாறி விட்டார். இவ்வளவு ஜாம்பவான்கள் இதில் ஆர்வமா இருக்கும் போதே உங்களக்கு தெரிந்திருக்கும் இந்த புத்தகத்தின் உலகளாவிய தாக்கத்தை. எல்லா சர்வதேச எழுத்தாளர்களின் புத்தகங்களிலும் தவறாமல் இடம் பெரும் வாக்கியம் World’s Best Seller. ஆனால் இது உண்மையிலேயே World’s Best Seller.

No comments:

Post a Comment