சிறு வயதில் ஊரில் விளையாடி கொண்டிருக்கும் போது
வானத்தில் மிக தூரத்தில் ராக்கெட் விட்டு சென்ற புகையை அண்ணாந்து பார்த்து நமக்கு தெரிய
வில்லை என்றாலும் தெரிந்த மாதிரி நண்பர்களிடம் எதையாவது சொல்லி கொண்டிருப்போம்.
கொஞ்சம் அல்ல நிறைய வயது ஏறிய பிறகுதான் விமானம் ஹெலிகாப்ட்டர் எல்லாம் பார்க்க
ஆரம்பித்தோம். அதுவும் மதுரை ஏர்போர்ட் பின்புறம் உள்ள ரிங் ரோட்டில் நின்று
பார்ப்பது என்பது லட்ச ரூபாய் நமக்கு கிழே இருந்து கிடைத்த மாதிரி. இது நடந்து ஒரு
பத்து வருடங்களுக்கு முன்னால், ஆனால் இப்பொழுதும் இதே காட்சி அங்கு நடைபெறுவது
நம்மள மாதிரித்தான் எல்லாரும் என்று நினைக்க தோன்றும். எல்லாருக்கும் இருக்கும்
ஆசை போல எப்பொழுது நமது முதல் விமான பயணம் அமையும் என்று ஏங்க வைத்த நாட்கள் மிக
அதிகம். அப்போடியொரு நாள் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு நடந்தது. எனக்கு
மிகவும் சந்தோசம் அதுவும் முதல் முறை ஏறபோகிறோம் என்று. எல்லாம் மிகவும் நன்றாகவே
நடந்தது விமானத்துக்குள் கால் வைக்கும் வரை.
வைத்த பிறகு பெரிய சுவாரஸ்யமே இல்லை, ஏனென்றால்
சீட் இடைவெளி மிக குறைவு, ஏதோ ஓசியில் பொங்கல் வாங்க அடித்து கொள்வதுபோல் இரண்டு
சீட்டுக்கு இடையில் நெருக்கம் மிக அதிகம். அதை விட முக்கியம் நீங்கள் பயணம்
செய்யும் அந்த ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ எப்படா போகும்
என்றாகிவிடும். அதுவும் பக்கத்தில் இருப்பவன் 300 ரூபாய்க்கு ஒரு இட்லி ஒரு வடை,
ஒரு தயிர் கப் அப்புறம் ஒரு ஜூஸ். நமக்கும் வேறு பொழுது போக வழி இல்லை என்பதால்
அவனை வேடிக்கை பார்க்கும் பொழுது அவனுடைய எப்படியிருக்கும் என்பது நான் சில தடவை
சாப்பிடும்போது அனுபவித்திருக்கிறேன். “பேரு பெத்த பேரு பருக நீலு ரேது” என்பது போல் இருக்கும் இந்த ஏர் ஹோஸ்டஸ் ஐ பார்க்கும்
போது. பார்பதற்கு மிக மிக அழகாக இருக்கும் அந்த பெண்கள் தண்ணியோ சாப்பாடோ
கொடுக்கும் போது நம்மூரில் ஹோட்டலில் வேலை செய்யும் வட இந்திய பையன்களின் முகம்
வந்து தொலைக்கிறது, மனம் ஐயோ பாவம் என்றாகி விடுகிறது. எவனோ ஒருவன் ஏர் ஹோஸ்டஸ்க்கும்
பைலட்டுக்கும் நல்ல லிங்க் இருக்கும் என்று சொன்னது அப்பப்போ மூளையில் எட்டி
பார்ப்பதை தடுக்க முடிவதில்லை. சரி இதையெல்லாம் தாங்கி கொள்ளலாம் என்றால் ஒரு மணி
நேர பயணத்திற்கு இரண்டு மணி நேரம் வெயிட் பண்ண வேண்டும். அதை விட முக்கியம்
விமானத்தில் பயணம் என்று முடிவான பிறகு பஸ் அது ஏன் இந்த ஆட்டோ கூட எடுக்க தோன்ற
மாட்டேன்கிறது. ஒன்லி கால் டாக்ஸி வரும் போதும் போகும் போதும். ஆனால் மற்ற
நாட்களில் ஒன்லி பஸ் நோ ஆட்டோ அதுவும் ஒயிட் போர்டு பஸ் ஏனென்றால் அதில்தான் பச்சை
போர்டு பஸ்ஸை விட மூன்று ரூபாய் கம்மியாக இருக்கும்.
ஆனால் இதை எல்லாம் தாண்டி விமான பயணத்தை
தேர்ந்தெடுக்க சில காரணங்கள் – பயண நேரம் மிக மிக குறைவு, காலையில் சென்று
மாலையில் திரும்பி விடலாம், வேறு உடை எடுத்து போக தேவை இல்லை ஆபீஸ் பயணமாக
சென்றால். இவை எல்லாவற்றையும் விட மிக
முக்கியமான காரணம் வெளியில் பீற்றிக்கொள்ளலாம்.


No comments:
Post a Comment