Saturday, October 9, 2010

பதிவில் பிரபலமாவது எப்படி?

நம்ம மக்கள் எப்பவுமே சினிமா, அரசியல், விளையாட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் மத்த விசயத்துக்கு கொடுக்கிறது கிடையாது. என்னோட ஸ்கூல் படிக்கிற வயசில அது ஏன் இப்ப கூட தினத்தந்தி பேப்பரை படிக்கிறது காட்டிலும் அதுல வர வெள்ளி மலரைதான் நாம விரும்பி படிப்போம். சரி இப்பதான் எல்லாம் வேலைக்கு போய்கிட்டு இருக்கோம் அதுக்கு ஆங்கில அறிவு ரொம்ப தேவைபடுதுன்னு இங்கிலீஷ் பேப்பர்ரான தி ஹிந்து, டைம்ஸ் of இந்தியா பேப்பரை படிச்சாலும் அதுலயும் சினிமா நியூஸ்தான் முதல்ல படிக்கிறோம். இத நான் ஏன் சொல்றேனா பதிவில பிரபலமா இருக்கிற எல்லாருமே ஏதோ ஒரு வகையில சினிமாவை வைத்துதான் பிரபலமா ஆயிருப்பாங்க. அதா தவிர்த்து பிரபலமா ஆயிருப்பவங்க கொஞ்ச பேருதான். இல்லேன்னா அடுத்தவங்கள திட்டி திட்டியே பிரபலமா ஆயிருப்பாங்க.


சரி விஷயத்துக்கு வரேன் . இப்படி போட்டாதான் நம்மளையும் கண்டுகுவாங்க.

No comments:

Post a Comment