Saturday, February 26, 2011

வணக்கம் நண்பர்களே!

வணக்கம் நண்பர்களே!  
இந்த ப்ளாக் முயற்சி என்னுடைய அனுபவத்தையும், நான் கேள்விபடுகிற விசயங்களையும், நான் ரசித்த நிகழ்வுகளையும் சேமித்து வைக்க ஒரு சிறந்த இடம். டைரியில் எழுதுவது என்பது என்னோடு முடிந்து போகும் ஒரு செயல், இந்த முயற்சி தற்செயலாகவோ அல்லது விருப்பமாகவோ படிப்பவர்களுக்கு உதவும் என்ற ஒரு சிறு ஆசை, அதுமட்டுமில்லாமல் இன்றைய நவீன உலகதிற்கேற்ற எலெக்ட்ரானிக் டைரியாகவும் எடுத்துக்கொள்ளலாம். 

நான் இந்த ப்ளாக் ஆரம்பித்து சில பல மாதங்கள் ஆனாலும் ஏனோ இப்பொழுது பொதுவாக இணைக்க தோன்றியது. எனக்கு இந்த ப்ளாக் எழுத ஒரு ஊன்றுகோலாக இருந்தது எலக்ட்ரானிக் தமிழ் வடிவம் தான். என்னுடைய தமிழ் வாசிப்பு என்பது ஆனந்த விகடனுடன் நின்று விடுகிறது. இதையும் மீறி சில சமயம் தமிழ் தின நாளிதழ்கள். பெரும்பாலான நேரங்களை கணினி முன்பு செலவிட்டாலும் தின அலுவலின் அலுப்பு காரணமாக எதாவது படம் பார்ப்பது, பேஸ் புக்கில் நேரத்தை செலவிடுவது என்று சென்று விடுகிறது. கடந்த நாலைந்து மாதங்களாக தொடர்ந்து தமிழ் ப்ளாக்கை படித்து வருகிறேன்.

இனிமேல் தொடர்ந்து எனக்கு தோன்றும் எதையாவது எழுதுவது என்று முடிவெடுத்துள்ளேன்.                 



2 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஸ்ரீ அவர்களே! மிக நீண்ட நாள் கழித்து மீண்டும் தொடர்ச்சியாக என்றிருக்கிறேன்.

    ReplyDelete